9th-tamil-2nd mid term-model question-2-2026-pdf

 

இரண்டாம் இடைத் தேர்வு – 2026 (மாதிரி வினாத்தாள் – 2)

வகுப்பு : 9   |   பாடம் : தமிழ்   |   நேரம் : 1.30 மணி   |   மொத்த மதிப்பெண் : 50

(பாடப்பகுதி : இயல் 4 முழுவதும் மற்றும் இயல் 5-இல் சிற்பக்கலை, இராவண காவியம்)

பகுதி – அ

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                  (8 × 1 = 8)

1. கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?

அ) நஞ்சைநிலம்       ஆ) களர்நிலம்       இ) உவர் நிலம்       ஈ) புஞ்சை நிலம்

2. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றிய சமூகப் புரட்சியாளர் யார்?

அ) முத்துலட்சுமி ரெட்டி       ஆ) சாவித்திரிபாய் பூலே       இ) பண்டித ரமாபாய்       ஈ) மூவலூர் இராமாமிர்தம்

3. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் காணப்பெறும் சிற்பங்களின் சிறப்பு யாது?

அ) நடன முத்திரைகளுடன் அமைந்த சிற்பங்கள்       ஆ) இசைத் தூண்கள்
இ) பிரம்மாண்ட குதிரைச் சிற்பங்கள்                            ஈ) மரச் சிற்பங்கள்

4. ‘இரு’ என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?

அ) பட்டம் இருக்கிறது       ஆ) பட்டம் செய்திருக்கிறேன்    

இ) எங்கே இருக்கிறது?       ஈ) வானில் மேகம் இருக்கிறது

5. “வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்” என்ற வானொலி உரையை ஆற்றியவர் யார்?

அ) அறிஞர் அண்ணா       ஆ) திரு. வி. க.       இ) பாரதிதாசன்       ஈ) மு. வரதராசனார்

பாடலைப் படித்து 6, 7, 8 ஆகிய வினாக்களுக்கு விடையளிக்க:

“கல்லிடைப் பிறந்த ஆறும்

கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில்  தோன்று

முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்
        நீரினை கால்வாய் தேக்கும்

மல்லல்அம் செறுவில் காஞ்சி

வஞ்சியும் மருதம் பூக்கும்”

6. இப்பாடல் வரிகள் விவரிக்கும் முதன்மை நிலப்பகுதி எது?

அ) குறிஞ்சி       ஆ) முல்லை       இ) மருதம்       ஈ) நெய்தல்

7. ‘செறு’ என்னும் சொல்லின் பொருள் யாது?

அ) காடு       ஆ) மலை உச்சி       இ) வயல்       ஈ) கடல்

8. இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள ‘கரைபொரு’ என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு

அ) எண்ணும்மை                                       ஆ) பெயரெச்சம்      

இ) இரண்டாம் வேற்றுமைத் தொகை         ஈ) பண்புத்தொகை

பகுதி – ஆ

எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்க                                                   (6 × 2 = 12)

9. பண்டித ரமாபாயின் சமூகப் பங்களிப்புகள் இரண்டினைக் குறிப்பிடுக.

10. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

11. பகுபத உறுப்பிலக்கணம் தருக: குவித்து

12. ‘விடு’ என்னும் வினைச்சொல் முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமையுமாறு இரு தொடர்களை உருவாக்குக.

13. வல்லினம் மிகும் இடங்கள் இரண்டினைச் சான்றுகளுடன் எழுதுக.

14. தொல்காப்பியர் குறிப்பிடும் மூன்று மற்றும் நான்கு அறிவுயிர்கள் யாவை? அவற்றின் அறியும் ஆற்றல் யாது?

15. கலைச்சொற்களைத் தமிழில் தருக:     அ) Document          ஆ) Cave Paintings

16. சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எங்ஙனம் வகைப்படுத்துவர்?

பகுதி – இ

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்க                                                  (4 × 3 = 12)
(21 ஆம் வினா கட்டாய வினா)

17. மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் சமூகச் சீர்திருத்தப் பணிகள் குறித்து எழுதுக.

18. இராவண காவியத்தில் முல்லை நிலக் காட்சிகள் எங்ஙனம் எழிலுறச் சித்திரிக்கப்பட்டுள்ளன?

19. “நாட்டிற்கு நல்ல நிலை ஏற்பட வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்” – அண்ணாவின் வானொலி உரையின் வழி நிறுவுக.

20. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

21. அடிமாறாமல் எழுதுக:    “ ஒன்றறிவதுவே” எனத் தொடங்கும் தொல்காப்பியம் பாடல்

பகுதி – ஈ :

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விரிவாக விடையளிக்க                                 (2 × 5 = 10)

22. பாவேந்தர் பாரதிதாசன் குடும்ப விளக்கு நூலில் பெண்கல்வியின் இன்றியமையாமையாகக் குறிப்பிடும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

23. விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி எழுதுக.

படிப்போம்!                                                                                                       புதியன அறிவோம்!

புத்தகத் திருவிழா

நாள்   -        செப்டம்பர் 19 முதல் 28 வரை

இடம் -        சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்

நேரம் -        காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை

( முதல்நாள் மாலை 6 மணிக்குத் தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.)

( நாள் தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம் பெறும்)

அனைவரும் வாரீர்! அறிவுத் திறம் பெறுவீர்

24. உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

பகுதி – உ

 ஏதேனும் ஒன்றனுக்கு விரிவாக விடையளிக்க.                                         (1 × 8 = 8)

25. அ) பல்லவர் காலம் மற்றும் சோழர் காலச் சிற்பக்கலையின் தனித்துவமான சிறப்புகளைச் சான்றுகளுடன் தொகுத்து விவரிக்க.    ( அல்லது )
ஆ) இராவண காவியம் காட்டும் இயற்கை எழில் காட்சிகள் மற்றும் தமிழரின் திணைசார் வாழ்வியலை விரிவாக நிறுவுக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post