9th-tamil-2nd mid term-model question-1-2026-pdf

 


இரண்டாம் இடைத் தேர்வு – 2026

வகுப்பு : 9   |   பாடம் : தமிழ்

நேரம் : 1.30 மணி   |   மொத்த மதிப்பெண் : 50

(பாடப்பகுதி : இயல் 4 முழுவதும் மற்றும் இயல் 5-இல் சிற்பக்கலை, இராவண காவியம்)

பகுதி – அ

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                  (8 × 1 = 8)

1. கீழ்க்காண்பனவற்றுள் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் சரியான குழுவினைக் கண்டறிக:

அ) காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், பண்டித ரமாபாய்
ஆ) நப்பசலையார், பொன்முடியார், நீலாம்பிகை அம்மையார், ஔவையார்
இ) காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார், ஔவையார்
ஈ) காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், மூவலூர் இராமாமிர்தம்

2. தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக அமைந்த நடுகல் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள தொன்மையான இலக்கண நூல் எது?

அ) தொல்காப்பியம்                      ஆ) நன்னூல்
இ) வீரசோழியம்                         ஈ) சிலப்பதிகாரம்

3. “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே / இரண்டறி வதுவே அதனொடு நாவே” – இவ்வடிகளில் 'அதனொடு' என்பது எதனைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்                           ஆ) தொடு உணர்வு
இ) கேட்டல்                            ஈ) காணல்

4. ‘பார்’ என்பது துணைவினையாக இடம் பெற்றுள்ள தொடர் எது?

அ) அவன் வீட்டைப் பார்த்தான்           ஆ) கீழே விழப் பார்த்தான்
இ) காட்சியைப் பார்                    ஈ) கண்ணால் பார்த்தான்

5. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியமான இராவண காவியத்தில் அமைந்துள்ள காண்டங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை:

அ) 6 காண்டங்கள், 3000 பாடல்கள்        ஆ) 5 காண்டங்கள், 3100 பாடல்கள்
இ) 7 காண்டங்கள், 3200 பாடல்கள்        ஈ) 5 காண்டங்கள், 2500 பாடல்கள்

பாடலைப் படித்து 6, 7, 8 ஆகிய வினாக்களுக்கு விடையளிக்க:

“அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்
மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே”

6. இப்பாடல் வரிகள் உணர்த்தும் நிலப்பகுதி எது?

அ) முல்லை                 ஆ) குறிஞ்சி               இ) மருதம்                         ஈ) நெய்தல்

7. ‘மைவனம்’ என்பதன் பொருள் யாது?

அ) சந்தனம்              ஆ) காந்தள் மலர்            இ) மலைநெல்                  ஈ) பவளம்

8. இப்பாடலை இயற்றிய ஆசிரியர் யார்?

அ) பாரதிதாசன்          ஆ) புலவர் குழந்தை     இ) தொல்காப்பியர்                ஈ) கவிமணி

பகுதி – ஆ

 எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்க                                                   (6 × 2 = 12)

9. நடுகல் என்றால் என்ன?

10. துணைவினைகளின் இரு முக்கியப் பண்புகளை எழுதுக.

11. பகுபத உறுப்பிலக்கணம் தருக: பூக்கும்

12. ‘இரு’ என்னும் வினைச்சொல் முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமையுமாறு இரு தொடர்களை உருவாக்குக.

13. தொடரிலுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக:
“கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக்குஞ்சுகள் ஓடின.”

14. கல்வி குறித்த சிறப்புத் தொடர்கள் இரண்டு எழுதுக.

15. கலைச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்க:
அ) Social Reformer          ஆ) Embossed sculpture

16. இராவண காவியம் – நூற்குறிப்பு தருக.

பகுதி – இ

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்க                                                 (4 × 3 = 12) 

(21 ஆம் வினா கட்டாய வினா)

17. தனித்தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.

18. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

19. பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும் என்பதைத் ‘குடும்ப விளக்கு’ பாடல் கருத்தின் வழி நிறுவுக.

20. சோழர் காலச் சிற்பங்களின் தனித்துவமான சிறப்புகளை விளக்குக.

21. அடிமாறாமல் எழுதுக:
   ‘கல்லிடைப் பிறந்த ஆறும்...’ எனத் தொடங்கும் இராவண காவியப் பாடல்

பகுதி – ஈ

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விரிவாக விடையளிக்க                                  (2 × 5 = 10)

22. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை  எழில்  காட்சிகளை உருவாக்குக.

23. காட்சியைப் பார்த்துக் கவினுறக் கவிதை எழுதுக.

24. பெண்கல்வி வளர்ச்சியின் இன்றியமையாமையை வலியுறுத்தி நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் ஒன்று வரைக.

பகுதி – உ

ஏதேனும் ஒன்றனுக்கு விரிவாக விடையளிக்க                                                            (1 × 8 = 8)

25. அ) நூலகம், நூல்கள் ஆகியன குறித்துப் பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற சிந்தனைகளை நயம்பட விளக்குக.      ( அல்லது )
ஆ) பல்லவர் காலம் மற்றும் நாயக்கர் காலச் சிற்பக்கலையின் நுட்பங்களையும் தனித்தன்மைகளையும் சான்றுகளுடன் விரிவாக நிறுவுக.

click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post