8TH-TAMIL-UNIT-8-SATTA MEYTHAI AMBEDKAR-NOTES OF LESSON

    

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       மார்ச்

இயல்                :         08

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       சட்ட மேதை அம்பேத்கர்


அறிமுகம்:

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பி, சமூக நீதிப் போராளி மற்றும் சிறந்த கல்வியாளரான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கைச் சிறப்புகளை அறிமுகம் செய்தல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • அம்பேத்கர் அவர்களின் புகைப்படங்கள்
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான படங்கள்.

  நோக்கம்:

  • அம்பேத்கரின் கல்விப் புலமை மற்றும் சமூகப் பங்களிப்பைப் புரிந்துகொள்ளுதல்.
  • சமத்துவம், கல்வி மற்றும் சமுதாய மேன்மை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

  ஆசிரியர் குறிப்பு:

அம்பேத்கர் அவர்களின் இளமைக்காலம், கல்வியின் மீது அவர் கொண்டிருந்த தாகம், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கு ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

  விளக்கம்:

சாதி, மதப் பாகுபாடுகளை எதிர்த்த அம்பேத்கர், பெண்கள் முன்னேற்றத்திற்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் பாடுபட்ட விதம் குறித்து விளக்குதல். அவரது நூல்கள் மற்றும் அவர் நிறுவிய அமைப்புகள் பற்றிய தகவல்களை வழங்குதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • அம்பேத்கர் அவர்களின் வாழ்வில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் காலவரிசைப்படி பட்டியலிடுதல்.
  • சமத்துவம் குறித்து வகுப்பில் கலந்துரையாடல் செய்தல்.

  மதிப்பீடு:

  • LOT: அம்பேத்கர் அவர்கள் எழுதிய மிக முக்கியமான நூல்கள் எவை?
  • MOT: அம்பேத்கர் ஏன் 'இந்திய அரசியலமைப்பின் சிற்பி' என்று அழைக்கப்படுகிறார்?
  • HOT: இன்றைய சமுதாயத்தில் அம்பேத்கரின் சிந்தனைகள் எவ்வாறு பொருந்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

  கற்றல் விளைவுகள்: 

  • T807: கட்டுரைகளைப் படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.
  • T808: கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல்.

  தொடர் பணி:

சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஒரு சிறு கட்டுரை எழுதி வருக.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post