www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : மார்ச்
இயல் : 08
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : புணர்ச்சி
அறிமுகம்:
பிரித்து எழுதுக,
சேர்த்து எழுதுக என சிலச் சொற்களை கரும்பலகையில் எழுதி அவை சேரும் விதத்தைக் கூறி பாடப்பொருளை
அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- புணர்ச்சி விதிகளை விளக்கும் அட்டவணை மற்றும்
எடுத்துக்காட்டுத் தொடர்கள்.
நோக்கம்:
- புணர்ச்சியின் அடிப்படை இலக்கணத்தை அறிதல்.
- நிலைமொழி, வருமொழி ஆகியவற்றின் தன்மைகளைப்
புரிந்துகொள்ளுதல்.
- இயல்பு மற்றும் விகாரப் புணர்ச்சிகளை வகைப்படுத்தக்
கற்றல்.
ஆசிரியர் குறிப்பு:
புணர்ச்சியில் உள்ள நிலைமொழி, வருமொழி விளக்கத்துடன், மாற்றமே இல்லாத 'இயல்புப் புணர்ச்சி' மற்றும் மாற்றம் பெறும் 'விகாரப் புணர்ச்சி'
(தோன்றல், திரிதல், கெடுதல்)
ஆகியவற்றை உதாரணங்களுடன் விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
சொற்கள் இணையும்போது ஏற்படும் மாற்றங்களை இலக்கண விதிகளுடன் விளக்குதல்.
மெய்யீற்றுப் புணர்ச்சி மற்றும் உயிர்ஈற்றுப் புணர்ச்சி குறித்து எளிய முறையில்
கற்பித்தல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- பாடநூலில் உள்ள சொற்களைப் பிரித்து, அவை எந்தப் புணர்ச்சியைச் சேர்ந்தவை எனக் கண்டறிதல்.
- புதிய சொற்களைப் பிரித்து, புணர்ச்சி விதிகளைப் பயன்படுத்திப் பயிற்சி செய்தல்.
மதிப்பீடு:
- LOT: புணர்ச்சி என்றால் என்ன?
- MOT: விகாரப் புணர்ச்சி
எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- HOT: 'மரம் + வேர்' - இச்சொல் எவ்வாறு புணரும்? இதில் நிகழும்
மாற்றம் என்ன?
கற்றல் விளைவுகள்:
- T816: மொழி பற்றிய நுட்பங்களை
அறிந்து, அவற்றை தம் மொழியில் எழுதும் போது
பயன்படுத்துதல்.
- T810: பாடலில் காணப்படும்
சொற்கள், தொடர்களைப் புரிந்துகொண்டு நயம்
பாராட்டுதல்.
தொடர் பணி:
பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சிச் சொற்களைப் பிரித்து, அவை இயல்பா அல்லது விகாரப் புணர்ச்சியா என அட்டவணைப்படுத்தி வருக.
