www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜனவரி
இயல் : 06
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பாரத ரத்னா எம்.ஜி.இராமசந்திரன்
அறிமுகம்:
நடிகராகவும், அரசியல் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த
எம்.ஜி.இராமச்சந்திரனின் வாழ்க்கைச் சிறப்புகள் மற்றும் அவரது மக்கள் நலப் பணிகளை
அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்
செய்த மக்கள் நலத் திட்டங்கள் குறித்த பட விளக்கங்கள்.
நோக்கம்:
- எம்.ஜி.ஆர் அவர்களின் ஆளுமைத் திறனையும், சமுதாயப் பணியையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
- தன்னலமற்ற சேவை மற்றும் பிறருக்கு உதவும்
மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்த்தல்.
ஆசிரியர் குறிப்பு:
எம்.ஜி.ஆர் அவர்கள் 'பாரத ரத்னா' விருது
பெற்றவர் என்பதையும், ஏழை எளிய மக்களுக்காக அவர் செய்த
பல்வேறு தொண்டுகளையும் விளக்குதல். கலைத்துறைக்கும்
அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பினை மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, அவர் சந்தித்த சவால்கள், மக்கள் அவரை 'புரட்சித் தலைவர்' என்று அழைப்பதற்கான காரணங்கள் மற்றும் அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு
வரப்பட்ட சத்துணவுத் திட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை விளக்குதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து
வகுப்பில் கலந்துரையாடல்.
- எம்.ஜி.ஆர் அவர்கள் செய்த மக்கள் நலத் திட்டங்களைப்
பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
- LOT: எம்.ஜி.ஆர் அவர்களுக்கு
வழங்கப்பட்ட மிக உயர்ந்த விருது எது?
- MOT: எம்.ஜி.ஆர் அவர்கள் ஏன் 'மக்கள் திலகம்' என்று அழைக்கப்படுகிறார்?
- HOT: எம்.ஜி.ஆர் அவர்களின்
மக்கள் நலத் திட்டங்கள் இன்றைய தலைமுறைக்கு எவ்வாறு பயன்படுகின்றன?
கற்றல் விளைவுகள்:
- T807: கட்டுரைகளைப் படிக்கும்
போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.
- T808: கட்டுரையைப் படித்த
பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல்.
- T814: தான் எழுதுவதைப்
படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு பயன்
விளைவிக்கும் வகையில் எழுதுதல்.
தொடர் பணி:
எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஒரு சிறு கட்டுரை எழுதி
வருக
