பனிரெண்டாம்
வகுப்பு
மாதிரி
திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு-1- 2026
மொழிப்பாடம்
– தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 90
அறிவுரைகள்
:
1) அனைத்து
வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில்
குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
குறிப்பு : I ) இவ்வினாத்தாள்
ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்
வேண்டும்.
( மதிப்பெண்கள் : 14 )
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன்
விடையினையும் சேர்த்து எழுதவும்.
பகுதி-அ
உரிய விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
(14X1=14)
1. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக்
கட்டுரைகளின் தொகுப்பு
அ) திசை எட்டும் ஆ) தமிழ்நாட்டு வரலாறு இ) மத்த விலாசம் ஈ) அஞ்சிறைத் தும்பி
2.”என் மகள் ஒருத்தியும் பிறன் மகன் ஒருவனும் என்று குறிப்பிடும் நூல்”____
அ) ஐங்குறுநூறு ஆ) கலித்தொகை இ) புறநானூறு ஈ) அகநானூறு
3. உலக மொழிகள் அனைத்திலும் எந்த சொற்கள் மிகுதி என்பர்____
அ) இடைச்சொற்கள் ஆ) உரிச்சொற்கள் இ) வினைச்சொற்கள் ஈ) பெயர்ச்சொற்கள்
4. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க ____
அ) வல்லினமெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
ஆ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
இ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஈ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
5. “தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்” அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கண குறிப்பு______
அ) இடைச்சொல் தொடர் ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை ஈ) உரிச்சொல் தொடர்
6.வ. உ. சி. யின் வாழ்க்கை வரலாறு என்ற நூலை எழுதியவர்____
அ) பாரதியார் ஆ) பரலி சு. நெல்லையப்பர் இ) ரா. அ. பத்மநாபன் ஈ) இளசை மணி
7. நாட்டரசன் கோட்டையில் பிறந்த ஆசிரியர்_____
அ) அய்யப்ப மாதவன் ஆ) நக்கீரர் இ) வேங்கடசாமி ஈ) நெல்லையப்பர்
8. சாய்வு நாற்காலி என்ற புதினத்தின் ஆசிரியர்—--
அ) உத்தமச்சோழன் ஆ) முகம்மது மீரான் இ) பூமணி ஈ) பாரதியார்
9. சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்று
குறிப்பிடுகிறார் —---
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ)
சோமசுந்தர பாரதியார் ஈ) இளங்கோவடிகள்
10.உயர்திணையில் பயன்படுத்தக்கூடாத வேற்றுமை உருபு—--
அ) ஆ ஆ) ஆது இ) அது ஈ) படி
11. “நரம்புக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது” என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது___
அ) நீர் நிலைகள் ஆ) மழை மேகங்கள் இ) சூரிய ஒளிக்கதிர் ஈ) மழைத்துளிகள்
12.இரு திணைக்கும் பொதுவானவை
அ) மாணவர்-வந்தனர் ஆ) ஆசிரியர்- வந்தார்
இ) குழந்தை- வந்தது ஈ) குழந்தை-கதிரவன்
13. ‘கண்ணாடியாகும் கண்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்—---
அ) பிரமிள் ஆ) சிற்பி இ)
அய்யப்ப மாதவன் ஈ) நகுலன்
14. மாசி திங்களில் நிகழும் விழாவாக மயிலைப் பதிகம் சுட்டுவது____
அ) ஓண விழா ஆ) காலாட்டு விழா இ) விளக்குத் திருவிழா ஈ) திருவாதிரை விழா
பகுதி-ஆ / பிரிவு-1
எவையேனும் மூன்று
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 3x2=6
15.இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகள் எழுதுக.
16. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?
17. மாதவியின் நாட்டிய நிகழ்வில் ஒலித்த இசை கருவிகளைப் பட்டியலிடுக.
18. அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
பிரிவு-2
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2x2=4)
19. இந்தோ_ சாரசனிக் கட்டடக்கலை-
குறிப்பு வரைக.
20. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
21. எழுத்தாணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பிரிவு-3
எவையேனும் ஏழு
வினாக்களுக்கும் மட்டும் விடையளிக்கவும்.
(7x2=14)
22. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
23. பகுபத உறுப்பிலக்கணம் ஏதேனும் ஒன்று தருக. இடிந்து (அல்லது) பழித்தனர்
24. புணர்ச்சி விதி தருக. (ஏதேனும் ஒன்றனுக்கு) முன்னுடை (அல்லது) தலைக்கோல்
25. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அ) அலை அளை அழை
26 . மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும்
பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
27. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
28. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.
அ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு
உயரலாம்.
ஆ) காலை எழுந்து படித்து
நமக்கு நன்மை ஏற்படும்.
29. தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
அ) முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
ஆ) வாழை காட்டில் குயில்கள்
அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
30. படிப்போம்; பயன்படுத்துவோம் அ)Software ஆ)Emotion
பகுதி-இ / பிரிவு-1
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 2x4=8
31. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
32. மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள் பற்றி எழுதுக.
33. “ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்” இடஞ்சுட்டி பொருள்
விளக்குக.
34. “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
பிரிவு-2
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 2x4=8
35. ‘குலஷோவ் விளைவு’ பற்றி குறிப்பு எழுதுக.
36. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
37. சென்னை ‘அறிவின்நகரம்’ என்பதைச் சான்றுகளுடன்
விளக்குக.
38. மணந்தகம். விளக்குக
(பிரிவு -இ)
எவையேனும் மூன்று
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 3x4=12
39.அ)ஏகதேச உருவக அணியை விளக்குக. (அல்லது)
ஆ) எடுத்துக்காட்டு உவமை
அணியை விளக்குக.
40. அ) கூதிர் பாசறை துறையை விளக்குக. (அல்லது)
ஆ) பொதுவியல் திணையை விளக்குக.
41. நயம்
பாராட்டுக.(மையக்கருத்தை கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக.)
பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ் மொழிக்கு நிகரும் உண்டோ
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தொற்றெனநம் அக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம் நாமக்கல் கவிஞர்
42. உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற
இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக
வரவிருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை எழுதுக.
43. தமிழாக்கம் தருக.
1) The limits of my language are the limits
of my world.
2) If you want people to
understand you, speak their language.
3) knowledge of languages
is the doorway to wisdom.
4.) learning is a treasure
that will follow its owner everywhere.
(பகுதி-ஈ)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்.
3x6=18
44.அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
ஆ) அறிவுடைமை வாழ்வின்
உயர்வுக்கு துணை நிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று
நிறுவுக.
45.அ)குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது_ எவ்வாறு விளக்குக.
(அல்லது)
ஆ) நிருவாக மேலாண்மை
குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து
எழுதுக.
46.அ) ‘சூரியனைப் பிரசிக்கும் பாறை’ சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக. (அல்லது)
ஆ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
பகுதி-உ
அனைத்து வினாக்களுக்கு
விடையளிக்கவும்.
(4+2=6)
47.அ) “மாமேயல்” எனத் தொடங்கும் பாடலை பாவகையுடன்
எழுதுக.
ஆ) “சூது” என முடியும் குறளை எழுதுக.
முதல் மதிப்பெண் 100/100 பெற்று வெற்றி
பெற வாழ்த்துகள்!
வினாத்தாள் உருவாக்கம்.
P.முத்துக்குமார் – முதுகலை
ஆசிரியர்
இளந்தமிழ் – முதுகலை ஆசிரியர்
குழு
