WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-10-2026
( பொதுத்தேர்வு 2020 முதல் ஆகஸ்ட் 24 வரை நடந்தத் தேர்வுகளின் தொகுப்பு)
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:40
பகுதி-அ
அ) அனைத்து
வினாவிற்கும் விடையளி:-
(20x2=40)
1. தேம்பாவணி
– குறிப்பு வரைக
2. பழமொழிகளை நிறைவு செய்க: அ) உப்பில்லாப் _________ ஆ) ஒரு பானை ________
3. “ ஒலித்து
“ பகுபத உறுப்பிலக்கணம் தருக.
4. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
5. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை
விடுவிக்கவும்.
அ) பழமைக்கு எதிரானது – எழுதுகோலில்
பயன்படும்.
ஆ) ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில்
வனம்
6. பழமொழிகளை
நிறைவு செய்க: அ) விருந்தும் மருந்தும்
_________ ஆ) அளவுக்கு________
7. அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
அன்புச்செல்வன்
திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்,
8. மரபுத் தொடருக்கான
பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
அ) மனக்கோட்டை ஆ) கண்ணும் கருத்தும்
9. குறள்வெண்பாவின்
இலக்கணத்தை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
10. விருந்தினர்களை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக
11. ‘ தஞ்சம் எளியன் பகைக்கு ‘ – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும்
எழுதுக
12. ‘ நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம்
மரம் – மரங்களை
வெட்டி எறியாமல்
நட்டு வளர்ப்போம் ‘ – இது போன்ற உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்
தொடர்களை எழுதுக.
13.
கூட்டப் பெயர்களை எழுதுக: அ) பழம் ஆ) புல்
14. ’ கிளர்ந்த’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
15. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக
பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக்
காட்டி நம் அருமைத் தமிழநாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி
விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம.பொ.சி
16. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.
17. மரபுத் தொடரைப் பொருத்தமான தொடரில் அமைத்து எழுதுக அ) அள்ளி இறைத்தல் ஆ) ஆறப்போடுதல்
18. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று
செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
19. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள்
உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச்
சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை
எழுதுக.
20. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்.
அ) கொடு –
கோடு ஆ) இயற்கை – செயற்கை
இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391
