8TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23- 4TH WEEK

  

நாள்               :           20-03-2023 முதல்   24-03-2023      

மாதம்                          மார்ச்

வாரம்               :              நான்காம்    வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             திருப்புதல்         இயல் - 8, திருக்குறள்

பொது நோக்கம்       :

Ø  மாணவர்களைப் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்

Ø  இயல் – 8 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்

Ø  செய்யுளில் உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்

Ø  பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில் போதிய பயிற்சி வழங்குதல்

Ø  பாடங்களுக்குகான செயல்பாடுகளை செய்ய வைத்தல்

Ø  சிறு சிறுத் தேர்வுகள் நடத்துதல்

Ø  மனப்பாடக்குறளை மனனம் செய்தல்

Ø  திருக்குறள் வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்

சிறப்பு நோக்கம்        :

Ø  பாடப்பகுதியில் உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  கட்டுரைப் பகுதியில் போதிய பயிற்சி தருதல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்

Ø  மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.

 

முக்கிய வினாக்கள்                                  :                               இயல் - 8

ஒன்றே குலம்

குறுவினா

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?

சிறு வினா

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

சிந்தனை வினா

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?

மெய்ஞ்ஞான ஒளி

குறுவினா

1. உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?

2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?

சிறுவினா

1. குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

சிந்தனை வினா

ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?

 

அயோத்திதாசர் சிந்தனைகள்

குறுவினா

1. அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?

2. ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வா று இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?

3. திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?

சிறுவினா

1. அயோத்திதாசரின் இதழ்ப்ப ணி பற்றி எழுதுக.

2. அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

நெடுவினா

வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.

சிந்தனைவினா

ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள் யாவை?

யாப்பு இலக்கணம்

சிறுவினா

1. இருவகை அசைகளையும் விளக்குக.

2. தளை என்பது யாது?

3. அந்தாதி என்றால் என்ன?

4. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

திருக்குறள்

குறுவினா

1. எது பெருமையைத் தரும்?

2. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?

 4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

 

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post