6TH - TAMIL - NOTES OF LESSON - MARCH-23 - 4TH WEEK

 

நாள்               :          20 - 03- 2023 முதல் 24 - 03 -2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :              நான்காம்  வாரம்                     

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. அணியிலக்கணம்

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் கண்டு களித்த அழகான இயற்கை இடங்களைப் பற்றிக் கூறுக

Ø  அழகு என்பது எதில் உள்ளது? போன்ற வினாக்களினைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

 

·         இயல்பு நவிற்சி, உயர்வு நவிற்சி அணிகளை இனம் காணுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

                                அணியிலக்கணம்

Ø  பாடல்களில் அழகை சேர்த்து அதனை விவரிப்பது அணிஇலக்கணம். எனக் கூறல்

Ø  செய்யுளினை சொல்லாலும், பொருளாலும் அழகு படக் கூறுவது அணி இலக்கணம்

Ø  அணி என்றால் அழகு எனக் கூறல்

Ø  இயல்பு நவிற்சி அணி: ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.எனக் கூறல்

Ø  உயர்வு நவிற்சி அணி : ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும். எனக் கூறல்

 

கருத்துரு வரைபடம்                 :

அணியிலக்கணம்

 


விளக்கம்  :

                              அணியிலக்கணம்

Ø  கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர்.

Ø  அணி என்பதற்கு அழகு என்பது பொருள

Ø  கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.

Ø  ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

Ø  ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

o  அழகு என்பதனை அறிதல்

o  செய்யுளில் அழகு என்பதனை அறிதல்

o  ஐவகை இலக்கணங்களை அறிதல்

o  அணி இலக்கணத்தைப் பற்றி அறிதல்

o  இயல்பு நவிற்சி அணி பற்றி அறிதல்

o  தகுந்த உதாரணங்களின் மூலம் இயல்பு நவிற்சி அணியை புரிந்துக் கொள்ளுதல்

o  உயர்வு நவிற்சி அணி பற்றி அறிதல்

o  தகுந்த உதாரணங்கள் மூலம் உயர்வு நவிற்சி அணியைப் பற்றி அறிதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  அணி என்பது யாது?

Ø  அழகு என்பது குறித்து நீ அறிவது யாது?

MOT :

Ø  இயல்பு நவிற்சி அணி பற்றிக் கூறுக

Ø  உயர்வு நவிற்சி அணி பற்றிக் கூறுக

HOT

Ø  இயல்பு நவிற்சி அணிக்கு நடைமுறை செயல்பாடுகளை கொண்டு விவரிக்க

Ø  செய்யுளினை ஏன் அழகுப் படுத்த வேண்டும்?

கற்றல் விளைவுகள்                  :

                                         அணி இலக்கணம்

 

·         T620  பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும் போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி எழுதுதல்.

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த இடம் ஒன்றினை இயல்பு நவிற்சியாகவும் உயர்வு நவிற்சியாகவும் விவரிக்க.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post