8TH-TAMIL-UNIT-6-IDAISOL,URI SOL-NOTES OF LESSON

   

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஜனவரி

இயல்                :         06

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       இடைச்சொல், உரிச்சொல்


  அறிமுகம்:

தமிழில் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் சார்ந்து வரும் 'இடைச்சொல்' மற்றும் பெயருக்கும் வினைக்கும் அடைமொழியாக வந்து பொருள்தரும் 'உரிச்சொல்' ஆகியவற்றின் சிறப்பினை அறிதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • இடைச்சொல் மற்றும் உரிச்சொல் வகைகளை விளக்கும் விளக்க அட்டவணைகள்.

  நோக்கம்:

  • இடைச்சொற்களின் வகைகளை (வேற்றுமை உருபுகள், , ஆல், கு, இன், அது, கண்) அறிதல்.
  • உரிச்சொற்கள் பல பொருள்படும் ஒரு சொல்லாகவும் அல்லது ஒரு பொருள்படும் பல சொல்லாகவும் வருவதைப் புரிந்துகொள்ளுதல்.

  ஆசிரியர் குறிப்பு:

இடைச்சொற்கள் தனித்து இயங்காது என்பதையும், உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரிய சொற்கள் என்பதையும் விளக்குதல். 'சால, தவ, நனி, கூர், கழி' போன்ற உரிச்சொற்களின் பயன்பாட்டைப் புரிய வைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

  விளக்கம்:

பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் இணைக்கும் இடைச்சொற்கள் மற்றும் பெயரின் தன்மையை அல்லது வினையின் சிறப்பை மிகைப்படுத்திக் கூறும் உரிச்சொற்களின் இலக்கண அமைப்பை விளக்கமளித்தல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • பாடநூலில் உள்ள தொடர்களைக் கொண்டு இடைச்சொற்களையும் உரிச்சொற்களையும் பிரித்தெடுத்தல்.
  • தெரிந்த உரிச்சொற்களைப் பயன்படுத்திச் சொந்தத் தொடர்கள் அமைத்தல்.

  மதிப்பீடு:

  • LOT: இடைச்சொற்கள் தனித்து இயங்குமா?
  • MOT: பல பொருள்படும் ஒரு சொல்லிற்கு எடுத்துக்காட்டு தருக.
  • HOT: உரிச்சொற்கள் ஏன் செய்யுளுக்கே உரிய சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன?

  கற்றல் விளைவுகள்:

  • T816: மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து, அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்.
  • T817: மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்ன சொற்களைப் பிறிதொரு சூழலில் தனது மொழி நடையில் பயன்படுத்துதல்.

  தொடர் பணி:

பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சித் தொடர்களில் இருந்து ஐந்து இடைச்சொற்களையும், ஐந்து உரிச்சொற்களையும் கண்டறிந்து எழுதி வருக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post