SLM-10th-tamil-qtly-Answer key-2025

 

சேலம் மாவட்டம்

பத்தாம் வகுப்பு – காலாண்டுத் தேர்வு – 2025ச்

                                            மொழிப்பாடம் விடைக்குறிப்பு                                                     நாள் : 15.09.25

வி.எண்

விடைக்குறிப்பு

மதிப்பெண்

                                                                பகுதி – 1                                                       15×1=15

1

ஆ. கம்பராமாயணம்

1

2

இ) அப்பாதுரையார்

1

3

அ) விரும்பப்படாதவன்

1

4

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

5

ஆ) எழுவாய்த் தொடர்

1

6

ஆ) மணிப்பெயர் வகை

1

7

அ) பண்டம் குப்பையிலே

1

8

ஆ) காளிதாசர்

1

9

ஆ) கால வழுவமைதி

1

10

ஆ) கி.ராஜநாராயணன்

1

11

அ)

1

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி

12

ஆ) பரிபாடல்

1

13

அ) உருஅறி - உந்துவிசை

1

14

ஈ) அடுக்குத்தொடர்

1

15

இ) கீரந்தையார்

1

 

                                                              பகுதி – 2 / பிரிவு -1                                          4×2=8

16

அ. தாவரங்களில் விளையும் தானியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆ. இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையைக் கொடுக்கும் பருவக்காற்று எது?

2

17

 

சிலம்பு,கிண்கிணி

காலில் அணிவன

அரைஞாண்

இடையில் அணிவது

சுட்டி

நெற்றியில் அணிவது

குண்டலம், குழை

காதில் அணிவன

சூழி

தலையில் அணிவது

2

18

v  புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

v  பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம் போன்றவற்றை அறியமுடிகிறது.

v  கருத்துப் பகிர்வை தருகிறது.

v  மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவர்

2

19

Ø  முயற்சி செய்தால் செல்வம் பெருகும்.

Ø  முயற்சி இல்லாவிட்டால் வறுமை வந்து சேரும்.

2

20

சம்பா நெல்வகை : ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, சீரகச்சம்பா

2

21

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்

2

 

                                                              பகுதி – 2 / பிரிவு -2                                       5×2=10    

22

உவப்பின் காரணமாக , “ சிரித்து சிரித்துப் பேசினார் “ என அடுக்குத்

தொடராகும்.

2

23

அ) மெய்யெழுத்து                     ஆ) பண்பாடு

2

24

கிளர்ந்தகிளர் + த்(ந்) + த் + அ

கிளர்பகுதி

த்சந்தி

த்(ந்) – ந் ஆனது விகாரம்

த்இறந்த கால இடைநிலை

பெயரெச்ச விகுதி

2

25

தண்ணீர் குடி

இரண்டாம் வேற்றுமைத் தொகை

முகில் தண்ணீரைக் குடித்தான்

தயிர்க்குடம்

இரண்டாம் வேற்றுமை உருபும் உடன் தொக்கத் தொகையும்

அமுதா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்

2

26

அ. ஒழுக்கமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

ஆ. சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

2

27

Ø  ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது.

Ø  வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.

2

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 

அ) கொள் என்பதற்கு கோள் என எழுதினான்

ஆ) விதி என்பதற்கு வீதி என எழுதினான்

2

28

அ) காண் – காட்சி, காணுதல், காணாமை

ஆ) படி – படிப்பு, படித்தல், படிக்காமை

2

 

                                                              பகுதி – 3 / பிரிவு -1                                         2×3=6

29

v  பனைவடலி  ஆழமாக நடப்பட்டது

v  மாங்கன்று  ஆழமாக நடப்பட்டது.

v  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

v  கத்தரி நாற்று  வளர்ந்து வருகிறது.

v  தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது.

3

30

அ) முன்பின் அறியாத புதியவர்கள்

ஆ) விருந்தே புதுமை

இ) பொருத்தமான தலைப்புக்கு மதிப்பெண் வழங்குக

1

1

1

31

v  பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.

v  உலகை எல்லாம் வலையாக பிடித்திற்கும் ஊடக வளர்ச்சி மொழிபெயர்ப்பின் மூலம் உருவானது.

v  விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.

v  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களை அடைகின்றன.

v  மொழிபெயர்ப்பால் புதுவகை சிந்தனைகள், மொழிக்கூறுகள் பரவுகின்றன.

3

 

                                                              பகுதி – 3 / பிரிவு -2                                         2×3=6

32

Ø    தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.

Ø    விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் பழைய வாளைப் பணையம் வைத்தான் தலைவன்.

Ø    மறுநாளும் விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான் தலைவன்

3

33

v  பருபொருள்கள் சிதறும்படி பெருவெடிப்பு நிகழ்ந்தது.

v  நெருப்பு பந்து போல புவி உருவாகியது.

v  பூமி குளிரும்படி தொடர்ந்து மழை பொழிந்தது.

v  தொடர் மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

v  பின் உயிர்கள் உருவாகி வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவானது

3

34அ

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

          போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

          ஒழுக்கமும் வழிபடும் பண்பே  - அதிவீரராம பாண்டியர்

3

34ஆ

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா - பரஞ்சோதி முனிவர்

3

 

                                                              பகுதி – 3 / பிரிவு -3                                         2×3=6

35

மார்கழித் திங்கள்

இருபெயரொட்டுப் பண்புத் தொகை

நடைபயிற்சி மேற்கொண்டனர்

வேற்றுமைத் தொகை

செங்காந்தள்

பண்புத் தொகை

அதிகாலை நேரம்

இருபெயரொட்டுப் பண்புத் தொகை

வீடு சென்றேன்

வேற்றுமைத் தொகை

3

36

அணி      : 

Ø  ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிடுவது  உவமை அணி.

Ø உவமை, உவமேயம்,உவம உருபு இடம் பெறும்.

உவமை  :      வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்

உவமேயம் :    செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்.

உவமஉருபு :  போலும்

 

 

1

 

 

1

 

 

1

37

v  ஏதேனும் இரண்டு வழுவமைதிகளின் விளக்கம்

v  வழுவமைதிகளுக்கு எடுத்துக்காட்டு

3

 

                                                              பகுதி – 4                                                         5×5=25

38அ

Ø  ஒழுக்கமே சிறப்பைத் தருவது.

Ø  ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய் பேணிக் காக்க வேண்டும்.

Ø  ஒழுக்கமாக வாழ்பவர் மேன்மை அடைவர்.

Ø  ஒழுக்கம் தவறுபவர் அடையக் கூடாத பழிகளை அடைவர்.

Ø  உலகத்தோடு ஒத்து வாழாதவர். பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவராகக் கருதப்படுவார்.

5

38ஆ

வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது

v  அவன் பாதங்களில்   கிண்கிணிகளோடு சிலம்புகளும்  சேர்ந்து ஆடுகின்றன .

v  இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன

v  நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன.

v  காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன

5

39அ

சேலம்

03-03-2025

அன்புள்ள நண்பனுக்கு,

   நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

         பெறுதல்

                     திரு.இரா.இளங்கோ,

                     100,பாரதி தெரு,      சேலம்.

1

1

1

1

1

39ஆ

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

போயிட்டு வாங்க சார்!.....

நூலின் மையப் பொருள்:

         இந்நாவலில் கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். பெயர் சிப்ஸ், முழுப் பெயர் சிப்பிங். முதன் முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்தவர். அதன் விளைவாக இந்நாவலை வாசிப்பவரையும் உருக வைப்பவர் சிப்ஸ்.

மொழிநடை:     

         யாவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிமையான தமிழ்சொற்களைக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. தமிழில் கையாளப்பட்ட இச்சொற்களை படிக்கும் போது நாமும் இந்நாவலின் ஆசிரியர் போல் இருக்க வேண்டும் என எண்ண வைக்கிறது.

வெளிப்படுத்தும் கருத்து:

ஆசிரியரும் மாணவர்களுக்குமான உறவுநிலையை வெளிப்படுத்துகிறது.44 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரின் அனுபவம் இந்நாவலில் கிடைக்கிறது.

நூலின் நயம்:

         நாவல் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சீராக ஆசிரியர் சிப்ஸ் உடன் செல்கிறது. வாசிக்க வாசிக்க சோர்வில்லாத எழுத்து நடையும், நூலின் நயமும் சிறப்பாக உள்ளது.

நூல் கட்டமைப்பு:

         புரூக்பீல்டு பள்ளியில் கிடைத்த 44 ஆண்டுகள் பணிகாலத்தில் பல மாணவர்களை சந்தித்தவர் சிப்ஸ். 65 வயதில் பணி ஓய்வு பெற்றார். கற்பனை கதாபாத்திரத்திரம் ஆனால்  அசல் மனிதர் போல நெஞ்சில் நிற்க வைத்து விடுகிறது இந்நாவல்

சிறப்புக்கூறு:            

 பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணி ஓய்வுக்குப் பின் சிப்ஸைப் போன்று மாணவர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கு இந்நாவல் வழிகாட்டுகிறது. இது மொழிபெயர்ப்பு நூல் அல்ல. Good Bye,Mr.Chips -1933 இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான கதை.

நூல் ஆசிரியர்:             ச. மாடசாமி.

5

40அ

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

    என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

      நாய் என் பசியைப் பற்றி எழுது என்றது

சிறுமி என் வறுமையைப்  பற்றி எழுது என்றாள்

      நான் எழுதுகிறேன் வறுமையிலும் பிறர்

பசிப்போக்குவதே சிறந்தப் பண்பு  என்று

5

40ஆ

காற்றைப் பாராட்டுதல் :

         கவிஞர் காற்றினை பலவாறாக பாராட்டியுள்ளார்.

·        பாதி மலர் போல் வரும் மெல்லியக் காற்று.

·        காலைப் பொழுதின் குளிர்க்காற்று

·        மெல்ல நடந்து வரும் இளந்தென்றல்

·        தமிழ்ப் போல் சிறப்புடன் வாழ்வாயாக

மோனை நயம்:

         செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.

                    லர்ந்தும்    லராத                  ளரும்       ண்ணமே

எதுகை நயம்:

          செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.

                    ர்ந்தும்    ராத

சந்த நயம்:

         இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

இயைபு நயம்:

         இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.

                   வண்ணமே           அன்னமே

முரண் நயம்:

         முரண்பாடாக அமைவது முரண்.

                     மலர்ந்தும் × மலராத                     விடிந்தும்  × விடியாத

பொருள் நயம்:

          காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

5

41

நூலக உறுப்பினர் படிவம்

____________சேலம்________________மாவட்ட  நூலக ஆணைக்குழு

மைய / கிளை/ ஊர்ப்புற நூலகம் ______ஆத்தூர்- கிளை_____________

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண் : 150                                                                          உறுப்பினர் எண் : 150

1. பெயர்                                                             :  சை.சைதானி பீவி

2. தந்தை பெயர்                                                 : சையத் பாஷா

3. பிறந்த தேதி                                                   : 13-10-2009

4. வயது                                                            : 15

5. படிப்பு                                                            : பத்தாம் வகுப்பு

6. தொலைபேசி/ அலைபேசி எண்                       :  80724&&&&&

7. அஞ்சல் முகவரி                                             : 18அ, கோரித் தெரு,

                                                                              ஆத்தூர் வட்டம்,

                                                                               சேலம் மாவட்டம்

நான் ___ஆத்தூர் – கிளை______ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய

இத்துடன் காப்புத்தொகை ரூ_100_ சந்தா தொகை ரூ _50_ஆக

மொத்தம் ரூ._150_ ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.                                              

                                                                             தங்கள் உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                         சை.சைதானி பீவி

நாள் :  25-03-2025

திரு / திருமதி / செல்வன் / செல்வி  சை.சைதானி பீவி அவர்களை

எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.

                                                              பிணைப்பாளர் கையொப்பம்

அலுவலக முத்திரை                                ( பதவி மற்றும் அலுவலகம் )

   ( மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்      உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி / நகராட்சி / ஒன்றிய / பேரூராட்சி உறுப்பினர்கள் )

5

42அ

மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூற விழைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

5

42ஆ

வசன கவிதை நடையில் பத்தியைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்திருப்பின் மதிப்பெண் வழங்குக

5

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 

1.      மீண்டும் மீண்டும்

2.    தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

3.    பெய்மழை

4.    நீருக்கும் ஆற்றல் உணடு

5.    ஐம்பூதங்கள்

1

1

1

1

1

 

                                                              பகுதி – 5                                                        3×8=24

43அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

காற்று மாசுபாடு

மரங்கள் நடுதல்

பொதுப்போக்குவரத்து

நெகிழி கட்டுப்பாடு

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

முடிவுரை

முன்னுரை :

          ஐம்பூதங்களில் ஒன்று காற்று. காற்று இல்லையேல் உலகம் இல்லை. அக்காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

காற்று மாசுபாடு :

v  காற்று மாசுபாடு என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஒரு பெரும் ஆபத்தாகும்.

v  இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும், உயிரினங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும்.

மரங்கள் நடுதல் :

v மரங்கள் அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.

v அதிக மரங்கள் நடுவதன் மூலம் காற்றின் தூய்மையை பராமரிக்கலாம்.

பொதுப்போக்குவரத்து :

v  மக்கள் பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

v  மின்சார வாகனங்களை மிகுதியாகப் பயன்படுத்துங்கள்.

நெகிழி கட்டுப்பாடு :

v  தீயால் எரிக்கப்படும் நெகிழி மற்றும் வேதியியல் கழிவுகள் காற்றை மிகவும் மாசுபடுத்துகின்றன.

v  புதைவடிவ எரிபொருள்களைத் தவிருங்கள்

விழிப்பூணர்வு ஏற்படுத்துதல் :

v  மக்களுக்குள் காற்று மாசுபாட்டின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம்.

v  பள்ளிகள், கல்லூரிகள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மாசுபாடு குறைக்கும் நடவடிக்கைகளை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

முடிவுரை :

         காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக இக்கட்டுரையில் கண்டோம்.

8

43ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

         கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

v  மன்னன் குலேசப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார்

v  மன்னன் அதனை பொருட்படுத்தாமல்  இகழ்ந்தார்

இறைவனிடம் முறையிடல்

v  இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

v  மன்னன் தன்னை இகழவில்லை.

v  இறைவனான உன்னை இகழ்ந்தான் என முறையிடுகிறார்.

இறைவன் நீங்குதல்

v  இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

v  வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

v  மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

v  இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

v  மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

v  இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

v  மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார்,

8

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

         பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல். கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் என்னும் கதையில் வரும் அன்னமய்யா என்னும் கிராமத்துக்காரரின் விருந்தோம்பலை இக்கட்டுரையில் வாயிலாக காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

         பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

         மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

v  சாம்பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

v  பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

v  மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

v  மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

v  பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

v  உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள்.  மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

v  மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

v  ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர்  உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேண்டும்.

v  மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

v  மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

v  சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

v  அதில் இந்தப் பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

v  மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

v  அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

v  அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள்.

மேல்படிப்பு

v  மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது.  மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார்.

முடிவுரை

         எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

8

45அ

குறிப்புச்சட்டம்

தமிழின் இலக்கிய வளம்

கல்வி மொழி

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்

அறிவியல் கருத்துகள்

பிறதுறைக் கருத்துகள்

தமிழுக்குச் செழுமை

தமிழின் இலக்கிய வளம்

         உலக இலக்கியங்களில் தமிழின் இலக்கியப் பழமையும் பெருமையும் அழிக்கமுடியாது. தமிழின் இலக்கிய வளம் மேலும் சிறக்கப் பிறமொழிகளில் சிறந்து விளங்கும் நூல்களைத் தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும்.

கல்வி மொழி :

         மொழிபெயர்ப்பை கல்வி ஆக்குவதன் மூலம் தமிழ்மொழியின் பெருமைகளை பிற மொழியினரும். பிறமொழியின் சிறப்புகளை தமிழ் மொழியிலும் அறிந்து கொள்ள முடிகிறது.

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்:

·       பிறமொழிகளின் இலக்கியங்களை அறிந்துக் கொள்ளவும், புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

·       தாகூர் கீதாஞ்சலி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப் பின் தான் நோபல் பரிசு கிடைத்தது.

அறிவியல் கருத்துகள்

·       மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிறதுறைக் கருத்துகள் :

·       கல்வி,இலக்கியம், மருத்துவம் மட்டுமல்லாது பிற துறைகளும் மொழிபெயர்ப்பின் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளது.

·       பிற மாநில மொழிபடங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

தமிழுக்குச் செழுமை:

         தேமதுரத் தமிழ் எங்கும் பரவ வேண்டும். அதற்கு மொழிபெயர்ப்பு அவசியம் வேண்டும்.

8

45ஆ

குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

Ø  என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

Ø  அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

Ø  வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

Ø  வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

Ø  மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

Ø  அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

Ø  விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளைக் கூறினேன்.

Ø  ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன்.

இரவு விருந்து :

Ø  நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றை செய்தேன்.

Ø  இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தேன்.

பிரியா விடை :

Ø  இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்குச்  செல்வதாகக் கூறினர்.

Ø  அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்.

8

 

 click here to get this pdf

click here


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post